Microsoft Security Essential New free Antivirus Software from Microsoft. Microsoft இன் புதிய அன்டி வைரஸ் மென்பொருள்.


இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு செய்து விடலாம். எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இணையத்தில் உலவும்போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான தகவல்களை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.




வைரஸ்களில் இருந்து கணினிகளை பாதுகாக்க பல ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் உள்ளது. இந்த வரிசையில் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. Microsoft Security Essential என்ற மென்பொருள் இப்பொழுது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.







மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
இந்த மென்பொருள் முழுக்க முழுக்க இலவச மென்பொருளாகும். கணினியில் உள்ள வைரஸ்கள். மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது. கணினியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது. இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணினியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.




மென்பொருளை உபயோகிக்க கணினியின் அடிப்படை தேவைகள்:
விண்டோஸ் இயங்கு தளத்தின் சட்டபூர்வமான பதிப்பை உபயோகிப்பது அவசியம். Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணினிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும். XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம். Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம். கணினி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும். 200MB கணினியில் காலி இடம் இருக்க வேண்டும். மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது கணினியில் இன்டர்நெட் வசதி இருப்பது அவசியம்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய - Microsoft Security Essential Beta




Share this on Social Web sites.



Vithurshan Ganesharajah™ All rights Received. 2008-2012.

Share on Google Plus

About Vithurshan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Put your lucky comments