ஏராளமான இணைய பிரவுசர்கள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் வழங்கும் க்ரோம் பிரவுசர் தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்ற வற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் குரோம் பிரவுசராகும். சிறப்பம்சங்கள் இருந்தாலும் உலவியை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.
பிழையை சரிசெய்வது எப்படி:
அடோப் பிளாஷ் கணினியில் இரண்டு இடத்தில் இன்ஸ்டால் ஆகி இருக்கும். கணினியிலும் (OS Installation), குரோம் உலவியிலும் (Internal Flash Installation) இன்ஸ்டால் ஆகி இருக்கும். ஏதாவது ஒரு தளத்தை ஓபன் செய்யும் பொழுது இவை இரண்டிற்குள் நடக்கும் குழப்பமே இந்த பிழை வர காரணமாகிறது. இதில் ஒன்றை (Internal Flash Installation) செயலிழக்க வைத்து விட்டால் இந்த பிழை வராமல் தடுக்கலாம்.
- இதுவரை உங்களுக்கு இந்த பிழை ஏற்ப்பட வில்லை எனில் நீங்கள் எதுவும் மாற்றம் செய்ய வேண்டாம் பிழை ஏற்ப்படுபவர்கள் குரோம் உலவியை திறந்து அட்ரஸ் பாரில் chrome://plugins என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
- உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும் கீழே படத்தில் காட்டி இருக்கும் இடத்தில் உள்ள + Details என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்களின் விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும். அதில் Flash (2 files) என்ற பகுதி கீழே இருப்பதை போல இருக்கும்.
- Location என்பதில் உள்ள URL வைத்து இரண்டையும் சுலபமாக வேறுபடுத்தி பார்க்கலாம். மேலே படத்தில் காட்டியுள்ள (Chrome Internal Installation) பகுதியில் உள்ள Disable என்பதை கிளிக் செய்யவும்.
- Disable கிளிக் செய்தவுடன் உங்கள் விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும்.
- Disable செய்தவுடன் உங்களுடைய விண்டோவை மூடிவிட்டு திரும்பவும் ஓபன் செய்து கொள்ளவும். இனி இந்த பிழை ஏற்படாது.
Note1: இதனை disable செய்வதால் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பு வெளியிட்டவுடன் ஆட்டோமேட்டிக் அப்டேட் ஆகாது. புதிய பதிப்பை நீங்களே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்.
Note2: குரோம் உலவியை அப்டேட் செய்து விட்டால் இந்த நீட்சி திரும்பவும் வேலை செய்ய ஆரம்பித்து விடும் திரும்பவும் இதை Disable செய்யவேண்டும்.
தகவல்;-Info
Share this on social web sites.
Vithurshan Ganesharajah™ All rights Received. 2008-2012.
0 comments:
Post a Comment
Put your lucky comments