அடிக்கடி வரும் பூகம்பம், வராது வந்த சுனாமி, குளோபல் வார்மிங் எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் உலக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த ஒரு செய்தி நம்மை மிரள வைக்கிறது. அதாவது 2012, டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது
2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் அப்படித்தான் நினைத்தேன் அந்தச் செய்தியைப் படித்த பொழுது, ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி ஆதாரங்களை கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்தால் அது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது அதாவது எந்தவொரு ஆற்றலுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் சின்ன வயதில் நாம் படித்திருக்கிறோம், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற இயலும். ஆனால் ஆற்றலை அழிக்க முடியாது என. அதைத்தான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.இது 21.12.2012 அன்று நடைபெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது கட்டுகதை போல் தோன்றினாலும் நமது மனித வளர்ச்சியின் அடுத்த கட்டமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளில் இருந்து ஏவப்பட்ட லட்சக்கணக்கான வின்வெளி ஓடங்கள் மற்றும் செயற்க்கை கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டிருக்கும் வட்டத்தில் உள்ள இயற்கை சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது. எனவே பிரபஞ்சத்தின் மையமாக நாம் கருதும் அந்த கரு வளையம் தன் சக்தியை அதிகப்படுத்தினாலோ அல்லது சக்தியை குறைத்து கொண்டாலோ அதன் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் தங்கள் ஈர்ப்பு சக்தியை இழந்து கரு வளையத்துக்குள் இழுத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால், மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளோ “பூமி மொத்தமாக அழியாது. தற்போது அடிக்கடி வரும் சுனாமி, பூகம்பத்தைப் போல இன்னும் பெரிய அளவில் வந்து புவியின் அடுக்குகளில் அதாவது பிளேட் என்று சொல்லப்படும் புவி கட்டமைப்பு நகர்ந்து நிலப்பரப்புகள் மாறும், அப்போது இப்போதுள்ள பல உயிரினங்கள் அழிந்து புது உயிரினங்கள் தோன்றும். சூரியன் இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதன் செயலைச் செய்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் கடலாக இருந்த பகுதிதான் இன்று இமயமலை. இது போன்ற மாற்றங்கள் தான் நிகழும். ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்த டைனோசரும் இந்த மாதிரியான புவி மாறுதலால் தான் அழிந்து போனது” என்கின்றனர். இப்படி இரு மாதிரியான கருத்துகள் நிலவினாலும் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது 2012, டிசம்பர் 21 அன்று ஒன்று உலகம் அழியும்; அல்லது உலகம் மாறும் என்பது.
இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை படி காலம் நெருங்கி விட்டது என்ற வாக்குகள் அதிகம் உபயோகிப்படுகிறது. விவிலியத்தில் சுட்டிகாட்டப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். சுனாமி குறித்தும் இன்னும் பல பேரழிவுகள் குறித்தும் சில உண்மைகள் மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள் அப்படி அவை உண்மையாக இருக்குமே ஆனால் உலகம் என்பது அப்படியே இருக்கும் ஆனால் மனித இனமும் பிற உயிர்களும் அழிந்து புதிய பல உயிர்கள் உருவாகலாம். எப்படி இருந்தாலும் இந்த அழிவு என்பது மட்டும் அழியாமல் சுற்றி கொண்டிருக்கிறது. அப்படி உலகம் அழியாமல் உயிர்கள் அழிந்து புதிய உயிர்கள் தோன்றுவதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற அறிவியலின் வார்த்தை உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான் காரணம் நம் மனித வாழ்க்கை என்பது சிதைந்து விட்டது என்றே தோன்றகூடிய அளவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உணவை எடுத்து கொண்டால் இயற்கை உணவுகள் என்பது போய் எல்லாமே செயற்கையான உணவைத்தான் உண்டு மகிழ்கிறோம். மனிதர்களுக்கான பல குணாதியங்கள் மாறி வேறு ஒரு ஜந்துவாக மாறி கொண்டிருக்கும் மனிதர்களை நாம் தினமும் படித்தும் கண்டும் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதம் செத்துவிட்டது என்பது இன்று பொதுவான வாக்காக மாறி இருக்கும் சூழ்நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.
எது எப்படியோ உலகம் அழியும் என்பது பற்றி மேலும் சந்தேகம் இருந்தாலோ, என் மேல் சந்தேகம் இருந்தாலோ நீங்கள் End of the World Dec 21-2012 என்ற வார்த்தையைக் கொண்டு இணையத் தளத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இது பற்றி படங்களோடு விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதை நிரூபிக்கும் வகையில் புவியும் அடிக்கடி ஆட்டம் போடுகிறது. கடலும் கரையையும் கடந்து வருகிறது. என்னதான் நடக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்!!
0 comments:
Post a Comment
Put your lucky comments