மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர். அந்த வசதியின் படி கூகுள் பிளசில் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். எனக்கு தெரிந்து எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.
கூகுள் பிளசில் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை டைப் செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.
வலது புறத்தில் உள்ள T என்ற லிங்கை கிளிக் செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Share செய்து விடலாம்.
போட்டோவில் தமிழில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்டர் மார்க் சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
பிடித்திருந்தால் Social Web Sites ஊடாக உங்கள் நண்பர்களிற்கும் தெரிவியுங்கள்.
Vithurshan Ganesharajah™ All rights Received. 2008-2012.
0 comments:
Post a Comment
Put your lucky comments