கூகிள் நிறுவனத்தின் கனவுத்திட்டம் என்று வர்ணிக்கப்பட்ட கூகிள் வேவ் சேவையானது போதிய பயனாளர்கள் இல்லையென்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூகிளினால் கைவிடப்பட்டிருந்தது.
இவ்வாறு கைவிடப்பட்ட கூகிள் வேவ் ற்கு Apache நிறுவனம் மறுபடியும் உயிர் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மீழ் வடிவமைப்பு தொடர்பானஉத்தேசத்திட்டமானது Apache நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கூகிள் வேவ் கைவிடப்பட்டதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளின் காரணமாக கூகிள் தனது வேவ் தொடர்பான முழு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே Apache நிறுவனம் தனது மீள் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
கூகிள் வேவ் ஒரு அற்புதமான படைப்பாக இருந்த போதும் , இது ஏன் மக்களை போய்ச் சேரவில்லை எனபது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்துவந்தது ஆனால் இந்தச் செய்தியானது எனக்கு மிகவும் சந்தோசத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மீள் வருகை தொடர்பான உங்கள் கருத்து என்ன? கூகிள் வேவினை உங்களுக்கு பிடித்திருந்ததா? இதனை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்களா?
விதுர்ஷன்
0 comments:
Post a Comment
Put your lucky comments