

இந்த Google Cloud Connect இனை எமது கணணியில் நிறுவுவதன் மூலம் மைக்ரோ சொஃப்ட் Office ல் இருந்தவாறே எமது கூகிள் ஆவணங்களை தயார் செய்ய முடியும். இதனை செயற்படுத்த ஒரு முறை எமது Google Docs கணக்கையும் எமது Office ஐயும் இணைத்துவிட்டால் போதும். இனி எமது ஆவணங்களை இரண்டு பெரும் முண்ணணி நிறுவனங்களின் துணையுடன் தொகுத்துக் கொள்ளும் வசதியை கூகிள் ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்த சேவையானது பரீட்சாத்தமாக ”Google Apps for Business” பாவனையாளர்களில் கேட்டு வருபவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது (தற்போது இந்த வழங்களும் தற்போது வரைறுக்கப்பட்டிருப்பதாக கூகிள் தனது உத்தியோக பூர்வ வலைத் தள்த்தில் அறிவித்துள்ளது). மிக விரைவில் அனைத்து கூகிள் பாவனையாளர்களுக்கும் இந்த சேவை இலவசமாக வழங்கப்படவிருப்பதாக கூகிள் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Put your lucky comments