முதலில் http://www.mediafire.com/?zhj4r40t3bja8re என்ற இணைப்பில் சொடுக்கி தமிழ் மொழிக்கோப்பை (Tamil.lang)பதிவிறக்கவும். பின் அதனை C:\Program Files\Skype\Phone இனுள் கோப்பை இடவும்.
ஸ்கைப்பினுள் நுழைந்து Tools > Change Language > Load Skype Language file... இற்குச் சென்று பதிவிறக்கிய Tamil.lang கோப்பைத்தெரிவு செய்யவும். இப்போது அழகு தமிழில் ஸ்கைப்பில் அனைத்தும் தெரிவதைக் காணலாம்.
ஸ்கைப் (Skype) என்பது இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஓர் கணினி மென்பொருள் ஆகும். இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குதோடு தொலைபேசி மற்றும் நகர்பேசிகளுக்கு ஏற்கனவே பணம் கட்டியிருந்தால் அதிருந்து அழைப்புக்களுக்கான கட்டணைத்தை அறவிட்டு அழைப்பினை ஏற்படுத்த இயலும். இதை விட மேலதிக வசதிகளாக நிகழ்நிலை உரையாடல், கோப்புப் பரிமாற்றம், ஓளிப்பட /காணொளி(வீடியோ) உரையாடல்களையும் நிகழ்த்த இயலும். 2010 ஆம் ஆண்டளவில் 663 பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.
ஸ்கைப் குழமத்தில் தலமை அலுவலகம் இலக்சம்பேர்க்கில் அமைந்துள்ளது. இசுகைப்பின் விருத்தியாளர்களில் பெரும்பாலானவர்களும் 44% ஆன பணியாளர்கள் எசுத்தோனியாவில் உள்ள தலிலின், தார்ட்டுப் உள்ள அலுவலகங்களிலேயே பணியாற்றுகின்றனர்.
ஏனைய இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் மென்பொருள் போல் அல்லாமல் ஸ்கைப் சகா-சகா முறையிலேயே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றது.
ஸ்கைப் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாடிக்கயாளர்களைக் கவர்வதில் வெற்றிகண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகின்றது. ஈபே என்கின்ற இணைய வணிக நிறுவனத்தினால் செப்டமபர் 2005 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது.பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் மே 10, 2011 அன்று ஸ்கைப் நிறுவனத்தைத் தாம் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்கைப் இன் பொதுவான தொலைபேசிகளில் இருந்து கணினிக்கு ஒலி அழைப்புக்களை ஏற்படுத்தப் பயனபடும். உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்கள் ஆஸ்திரேலியா, பிறேசில், சிலி, டென்மார்க் டொமினிக்கன் றிப்பப்றிக் எசுத்தோனியா பின்லாந்து பிரான்ஸ் ஜேர்மனி ஹாங்ஹாங் ஹங்கேரி ஐயர்லாந்து இத்தாலி ஜப்பான் மெக்சிக்கோ நியூசிலாந்து போலாந்து றொமேனியா தென்கொரியா சுவீடன் சுவிட்சர்லாந்து ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். ஸ்கைப் பயனர் ஒருவர் இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளூர் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே கணினிக்கு அழைப்பு எடுப்பதற்கு ஆகும் செலவு உள்ளூர் தொலைபேசிக்கு ஏற்படுத்தும் அழைப்புக்கான கட்டணமே ஆகும். எடுத்துக் காட்டாக ஐரோப்பாவில் உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்களுக்கு கட்டணம் ஏதும் இன்றி இணைப்பை ஏற்படுத்த இயலும் எனில் ஸகைப் பயனருக்கும் அவ்வாறே கட்டணம் ஏதும் இன்றி அழைப்பை ஏற்படுத்தலாம். பிரான்ஸ் ஜேர்மான் ஆகிய நாடுகளில் வசிக்காமல் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தைனைப் பாவிப்பதானது சட்டபூர்வமற்ற ஓர் செயலாகும். பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் மே 10, 2011 அன்று ஸ்கைப் நிறுவனத்தைத் தாம் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்கைப் அவுட் (Skypeout) ஸ்கைப் இன் ஓர் கட்டணம் செலுத்தப் பட்ட சேவையாகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலுள்ளவர்களிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.
இதனை மூடிய Peer-to-peer முறையில் இயங்கும் இணையத் தொலைபேசி, தொலைஎழுது வலையமைப்பு ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு பாதுக்காப்புத் தடுப்புகள் (சுவர்கள்) கொண்டதும் மற்றும் NAT ஊடாக ஒலியழைப்புக்கள் சிறு பொதிகளாக்கப் பட்டு வேறு கணினி மென்பொருட்களுடன் சேர்த்து அனுப்பப்படும் அமைப்பு கொண்டது.
Vithurshan Ganesharajah™ All rights Received. 2008-2012.
0 comments:
Post a Comment
Put your lucky comments