500 மில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள ஃபேஸ்புக் சமூக வலைப்பின்னல் ஒரு புதிய மின்னஞ்ஞல் சேவையினை அறிமுகப்படுத்துமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு. இந்தக் கேள்விக்கான விடையினை நாளை எதிர்பார்க்கலாம்.
சோஷியல் நெட்வர்க்குகளின் ஜாம்பவானான ஃபேஸ்புக் இணையம் தனது 500 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்து ஏன் இன்னொரு வியாபாரத்தை ஆரம்பிக்கக்கூடாது? இந்தக் கேள்வி பலராலும் எழுப்பப்பட்டுவந்தது. அதற்கு நாளை ஒரு பதில் தரப்படுமா??
நாளை என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். அது என்னவென்றால், ஃபேஸ்புக் இணைய தளமானது நாளை ஒரு செய்தியாளர் சந்திப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது பல எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தக் காரணம் அண்மையில் தேடல் வேந்தன் கூகிளிற்கும் ஃபேஸ்புக்கிற்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதங்கள். ஏன் ஒரு பாரிய போர் என்றே குறிப்பிடலாம்.
மின்னஞ்ஞல் சேவை ஒன்றினை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு பல காரணங்கள் காணப்படுகிறன. அவற்றில் குறிப்பாக சொல்லப்படுவன யாதெனில்
01. ஃபேஸ்புக் மெசேஜ் சேவையில் காணப்படும் குறைபாடுகள். நமக்கு வரும் மெசேஜ்களை இந்நொருவருக்கு போர்வேர்ட் பண்ண முடியாமல் இருப்பது. எமது மெசேஜ்களோடு வேறு ஆவணங்களை சேர்த்து அனுப்ப முடியாமல் இருப்பது. எமது ஃபேஸ்புக் அல்லாத நண்பர்களுக்கு மெசேஜ் அல்லது மின்னஞ்ஞல்கலை அனுப்ப முடியாமல் இருப்பது. இது போன்ற காரணங்கள்.
02. கூகிளிற்கும் ஃபேஸ்புக்கிற்கும் இடையே அதிகரித்துள்ள போட்டி.
03. நாளை நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழின் தோற்றம். அதில் பொறிக்கப்பட்டுள்ள கடித உறையின் தோற்றம்.
04. 500 மில்லியன் பாவனையாளர்கள்.
இப்படி பல காரணங்கள் காணப்படுகிறது. இதற்கான பதிலினை நாளை ஃபேஸ்புக் வெளியிடும் என உலகமே எதிர்பார்க்கின்றது.
இன்னுமொரு மின்னஞ்ஞல் சேவையினை நீங்கள் எதிர்பார்க்கின்றீரா? உங்கள் கருத்துக்குளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment
Put your lucky comments