அப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ-போன் 4ல்(iphone 4) குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட consumer union எனும் அமைப்பு தனது consumer report எனும் சஞ்சிகையில் தெரிவித்துள்ளது.இங்கு அவர்கள் தங்களது ஆய்வறிக்கையினை வீடியோமூலம் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால் புதிய ஐ-போன் 4 ன் இடது பக்க கீழ் மூலையில் காணப்படும் ஒரு சிறிய இடைவெளியில்(antenna gap) நமது கைவிரல் தற்செயலாக தொடுமிடத்து எமக்கு வரும் தொலைபேசி அழைப்பில் தடங்கள் ஏற்படலாம் எனவும் சமிஞ்ஞை அளவு சடுதியாக மிகப்பெரியளவில் குறைவடைவதே இதற்கு காரணமாகும் என தெரிவித்துள்ளது.
இதற்கான தீரவையும் இந்த நிறுவனம் தர மறக்கவில்லை. ஐ-போனில்(iphone 4) காணப்படும் அந்த சிறிய அண்டென்னா இடைவெளியை ஒரு சிறிய duct tape துண்டினைக்கொண்டு மறைத்துவிடுவதன் மூலம் இந்த குறைபாட்டினை தீர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
@vithurshan.blogspot.com
NO PERMISSION TO COPYRIGHT
0 comments:
Post a Comment
Put your lucky comments