Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள்Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறதுஅதாவதுநெட்வொர்க்குகளுக்கும், கணினி,இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்குஅடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம்தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது
 தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும்மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீ
டுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந் ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fiஅலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன்டாலர்கள். 2011-12ஆம் ண்டுவாக்கில் இது 900மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்புகவலைகளையும்அச்சுறுத்தல்களையும் அளிக்துவங்கியுள்ளதுசமீபத்தில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு குறித்து விசாரணைமேற்கொள்கையில்பாதுகாப்பு நிறுவனங்கள்இதற்குகாரணமா ரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது.அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்றஅமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச்சென்றுள்ளது.

அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல்அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதுவிசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும்இந்த தொழில்நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால்ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும்இதனால்இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .


இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG)வெளியிட்டுள்ளதுஅதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட்நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளதுஅதன் பயனும்திறனும் மற்றகம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானதுஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்தஅளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்ததுஎனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளைமேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்பியற்ற இணைப்பு ங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!

ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள்தானியங்கி இணைப்பு அமைப்புகள்கியவை தற்போது பெருகி வருகிறதுஅதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களைவான்வழியாக அனுப்புவதால்அதனை ஹேக் செய்வது சுலபம்அதாவது யார்வேன்டுமானாலும் அதனைபார்க்க முடியும்இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின்நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமானவிஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.


என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல்அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும்ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களைதிருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல்இதில்ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்துதாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டுஅதன்வழி செல்லும் தகவல்களைதிருடுவது.

தற்காலிக நெட்வொர்க்குகள்இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது,அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு யங்குவதால் நீங்கள்ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுகமுடிவது.

இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
  • ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும்.உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள்கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
  • உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களைஎப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.

  • பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லதுஅல்லதுபிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.

  • MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பைஅனுமதிக்கவும்.

  • தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்..டி.) உடனடியாகமாற்றவும்.

  • தேவையில்லை என்றால் எஸ்.எஸ்..டிஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
  • திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்திவைக்கவேண்டும்.

  • உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.

  • உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள்.சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.

இந்த குறிப்புகள்தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியதுநிறுவனஙளும்அமைப்புகளும்இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும்ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளைஇவைகடைபிடிக்க வேண்டும்.

என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும்அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்ததொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனைஎன்றுதணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?
Share on Google Plus

About Vithurshan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Put your lucky comments