கூகிள் இரகசியமாக ஒரு சோஷியல் நெட்வேர்க் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பல செய்திகள் வெளியாகிருந்ததை நாம் அறிவோம். இதற்கு கூகிள் மீ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த சோஷியல் தயாரிப்புக்கு கூகிள் Google plus 1 அல்லது Google +1 என்று பெயரிடப்படுள்ளதாக பிரபல ஆங்கில தொழிநுட்ப இணைய தளமான techcrunch செய்தி
வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ளது.
Vithurshan |
கூகிளின் இந்த இரகசிய சோஷியல் தயாரிப்பினை உறுதி செய்யும் வகையில் இன்னுமொரு தகவலும் வெளியாகியுள்ளது. கூகிள் ஊழியர்கள் ஒரு புதிய iphone அப்ளிகேசன் ஒன்றை பரீட்சித்துவருவதாகவும் இது கூகிளின் அந்த இரகசிய தயாரிப்புடன் தொடார்புபட்டிருக்கலாம் எனவும் ஊகங்கள் வெளியாகியுள்ளது.
அந்த குறிப்பிட்ட அப்ளிகேசனின் பெயர் “Loop” என்று காணப்படுவதாக Techcrunch கூறுகிறது. கூகிளின் இந்த தயாரிப்பானது எவ்வாறு இருக்கும் என்பதை அறிய உங்களைப் போல் நானும் ஆர்வமாக உள்ளேன். இது தொடர்பாக ஏதும் தகவல்கள் வெளியாகுமிடத்து உங்களுக்கு அதனை முந்திக் கொண்டு அறிவிக்க முயர்சிக்கிறேன்.
vithurshan
0 comments:
Post a Comment
Put your lucky comments